6 வயது மகளை டிராஃபிக் சிக்னலுக்கு அழைத்து வந்த பெண் போலிஸ்.! செய்த செயலால், குவியும் பாராட்டு.! - Seithipunal
Seithipunal




கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் போக்குவரத்து பணியில் இருந்த பெண் காவலர் அவிநாசி சிக்னலில் விடுமுறைக்கு வந்த மகளுடன் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருபவர் சிவசரண்யா. திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சார்ந்த இவர் கோவையில் தங்கி பணியாற்றி வருகிறார்.

இவரது 6 வயது மகள், தந்தையுடன் பழனியில் வசித்து வருகிறார். பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருந்த மகள் தாயார் செய்யும் பணியை நேரில் பார்க்கவும் அவருடன் நேரத்தை செலவிடவும் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனை உணர்ந்த சிவசரண்யா தனது மகளை தன்னுடன் அழைத்து வந்திருக்கிறார்.

தன்னுடன் வந்த மகளை தான் பணியாற்றும் அவிநாசி சாலை சிக்னலுக்கு அழைத்துச் சென்று போக்குவரத்தையும் சீர்படுத்தி கவனித்துக் கொண்டு மகளையும் கவனித்து வந்திருக்கிறார்.  இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக இருக்கிறது. போக்குவரத்தையும் கவனித்துக் கொண்டு மகளையும் கவனிக்கும் காவலரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman trafic police did an amazing thing with her daughter during her duty time


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->