பெண் குழந்தைகள் திட்டத்தில் உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி.  இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை பெற ஆன்லைன் மூலம் காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்‌.

இந்த நிலையில் சமூக நல அலுவலர் கஸ்தூரியை நேரில் சந்தித்து விண்ணப்ப நிலை குறித்து சுப்பிரமணி கேட்டுள்ளார். அப்போது கஸ்தூரி 2000 ரூபாய் பணம் கொடுத்தால் உடனடியாக உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று  கூறியுள்ளார்.

அதற்கு சுப்பிரமணி 1800 ரூபாய் தருகிறேன் என்று கூறிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுப்பிரமணி இது குறித்து செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியிடம் ரசாயனம் தடவிய 1800 ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து அனுப்பினார். அவரும் அந்த பணத்தை நேற்று மாலை காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலர் கஸ்தூரி இடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் சமூக நலத்துறை அறையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து, சிலவற்றை கைப்பற்றியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women officer arrested for bribery in chengalpattu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->