மகளிா் உரிமைத் திட்டம் விண்ணப்பிக்க 2 நாள்கள் சிறப்பு முகாம்!
women rights apply program 2 days special camp
வருகின்ற ஆகஸ்ட் 19,20 ஆகிய இரண்டு நாட்களில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக சிறப்பு திட்ட செயலக துணைச் செயலர் தாரேஷ் அகமது நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, ''ஜூலை 24ஆம் தேதி மகளிர் உரிமை திட்டத்துக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் தொடங்கப்பட்டது.
இந்த முகமை முதல்வர் மு.க. ஸ்டாலின், தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். இருகட்டங்களாக இந்த முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.
முதல் கட்டமாக நியாய விலைக் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு கடந்த 4 ஆம் தேதி வரை முகாம்கள் நடத்தப்பட்டன.
இதில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் இந்த முகாம்கள் மூலம் பெறப்பட்டு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுவரை இரண்டாம் கட்டமாக 59.86 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் உள்ள தகவல்களை சரி பார்க்க கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.
அப்போது அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து விண்ணப்பதாரர்கள் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்'' என தெரிவித்தார்.
English Summary
women rights apply program 2 days special camp