1,000 ரூபாய் உரிமைத் தொகை வேண்டும் - வேட்பாளர் ஆ. ராசாவை முற்றுகையிட்ட பெண்கள்.!
womens ask 1000 rs money to a rasa
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அதன் படி, நீலகிரி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா இன்று காலை முதல் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதையடுத்து கெம்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு வந்த ஆ.ராசாவிடம் பெண்கள் சிலர், தங்களுக்கு 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்று புகார் அளித்தனர். அதற்கு அவர் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தற்போது எதுவும் செய்ய முடியாது. தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், முதல்வர் ஸ்டாலினே அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை வழங்குவதாக சொல்லிவிட்டார் என்று கூறி சமாதானப்படுத்தினார். மகளிர் உரிமைத் தொகை கேட்டு பெண்கள் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
womens ask 1000 rs money to a rasa