மும்மொழிக் கொள்கை - கோலம் மூலம் கோபத்தைக் காட்டிய பெண்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்திற்கு மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் ரூ.2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. 

இதற்கிடையே புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இதற்கு பல அரசியல் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை அய்யம்பாக்கம் ஊராட்சி பகுதியில் மகளிர் குழுவினர் மற்றும் இல்லத்தரசிகள் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோலத்தில் கோபத்தை காட்டியுள்ளனர்.

அந்த கோலத்தில் இந்தியை திணிக்காதே, தமிழர்களை வஞ்சிக்காதே, மீண்டும் மொழிப்போரை உருவாக்காதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை தனது வீட்டிற்கு முன்பு கோலமாக போட்டுள்ளனர். இந்த கோலத்தின் மூலம் நூதன முறையில் பெண்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

womens draw kolam against three language policy


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->