பாதாள சாக்கடை பணியின் பொழுது மண் சரிவில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் கூடல்புதூர் அடுத்த அசோக் நகர் இரண்டாவது தெருவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாதாள சாக்கடை பணியானது கோவை மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல தொழிலாளர்கள் பாதாள சாக்கடை திட்டப் பணியில் வேலை செய்து வந்தனர். அதில் ஈரோட்டை சேர்ந்த சக்திவேல் என்பவரும் பணியில் ஈடுபட்டார். 

பாதாள சாக்கடை பணிக்காக ஜே.சி.பி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்ற பொழுது எதிர்பாராத விதமாக குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்பொழுது பள்ளத்தில் வேலை செய்து கொண்டிருந்த சக்திவேல் மீது மண் சரிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக மண்ணில் புதைந்த சக்தி வேலை மீட்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். 

ஆனால் பள்ளத்தில் தண்ணீர் நிரம்பி விட்டதால் அவரை உடனடியாக மீட்க முடியவில்லை. இந்த சம்பவத்தில் சக்திவேல் மண் சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worker death in madurai drainage construction


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->