#கடலூர் || தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை
Worker suicide in Cuddalore
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சொரத்துறை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் என்.எல்.சி-யில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று சுப்பிரமணியன் முந்திரி தோப்பில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன் ஞானசேகரன், இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுப்ரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து முத்தாண்டி குப்பம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து சுப்ரமணியன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Worker suicide in Cuddalore