#தமிழகம் | அந்த வீடியோ... பிரபல யூட்யூபர் அதிரடி கைது : வெளியான அதிர்ச்சி காரணம்! - Seithipunal
Seithipunal


அரசின் திட்டங்கள் குறித்து பொய்யான தகவல்களைத் தொடர்ந்து பதிவேற்றி வந்த, ஓசூர் பகுதியை சேர்ந்த பிரபல யூட்யூபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி ஜனார்த்தன ரெட்டி.

இவர் அரசின் திட்டங்கள் குறித்து பொய்யான தகவல்களை தனது யூ டியூப் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார்.

'புதிய அறிவிப்புகள்' என்ற அந்த youtube பக்கத்தில், பிரபல செய்தி நிறுவனங்களின் வீடியோக்களை டவுன்லோட் செய்து பதிவேற்றி உள்ளார். மேலும், பொய்யான தகவல்களையும் அவர் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளார்.

இது குறித்து சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஜனார்த்தனன் ரெட்டியை சேலையூர் காவல் நிலைய போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

you tuber arrest for fake info at govt announe


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->