#மதுரை:: நேரடி அரசு வேலை.."வார்டு உறுப்பினர்கள் மிரட்டல்".. பேருந்தில் இருந்து குதித்து இளம் பெண் தற்கொலை..!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளுக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட மைதான்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் பொறுப்பாளராக நாகலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். நாகலட்சுமியின் கணவர் கணேசன் கோயம்புத்தூரில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் 100 நாள் வேலைத்திட்ட பொறுப்பாளராக இருந்து வரும் நாகலட்சுமியை ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பாலமுருகன் மற்றும் வீரகுமார், ஊராட்சி செயலாளர் முத்து ஆகியோர் நாகலட்சுமி பணி செய்யும் பொழுது தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

நாகலட்சுமி மாவட்ட ஆட்சியர் மூலம் நேரடியாக 100 நாள் வேலைத்திட்டத்தின் மேற்பார்வையாளராக மைதான்பட்டி ஊராட்சியில் வேலைக்கு சேர்ந்ததால் அவரை வேலை விட்டு சென்றுவிடு என ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நாகலட்சுமி இரண்டு தினங்களுக்கு முன்பு கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

நாகலட்சுமி புகார் அளித்த அன்றே அவருடைய வீட்டிற்கு சென்ற மூவரும் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நாகலட்சுமி இன்று தனது கடைசி இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு மைதான்பட்டியிலிருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணித்துள்ளார். 

இந்தப் பேருந்து சிவரக்கோட்டை அருகே வரும் பொழுது நாகலட்சுமி திடீரென்று பேருந்தில் அருகில் இருந்தவரிடம் தனது குழந்தைகளை ஒப்படைத்து விட்டு பேருந்தில் இருந்து திடீரென கீழே குதித்துள்ளார். மயங்கிய நிலையில் இருந்த அவரை பேருந்தில் பயணித்தோர் ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நாகலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாகலட்சுமி எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தில் பாலமுருகன், வீரக்குமார், முத்து ஆகிய மூவரும் தன்னை மிரட்டுவதால் தற்கொலை செய்து கொண்டதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.இந்த கடிதத்தை ஆதாரமாக கொண்டு கள்ளுக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கல்லக்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young lady suicide threatened by panchayat councillors


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->