நீலகிரி: முதுமலையில் புலி தாக்கி வாலிபர் படுகாயம்.!
Young man injured in a tiger attack in mudumalai
நீலகிரி மாவட்டம் முதுமலையில் புலி தாக்கி வாலிபர் படுகாயம் அடைந்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை காப்பாத்திற்க்கு உட்பட்ட லைட்பாடி பகுதியை சேர்ந்தவர் பொம்மன்(33). இவர் முதுமலையில் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பொம்மண் வீட்டிலிருந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக சற்று தூரமாக நடந்து சென்ற போது புதருக்குள் படுத்திருந்த புலி ஒன்று திடீரென பொம்மனை தாக்கியுள்ளது.
இதையடுத்து பொம்மை கீழே கடந்த கட்டையை எடுத்து தாக்க முயன்ற போது புலி அங்கிருந்து ஓடி உள்ளது. இதில் புலி தாக்கியதில் பொம்மனின் தலை, முதுகு, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பொம்மையின் சத்தம் கேட்டு ஓடி வந்த வனத்துறையினரும் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள், பொம்பளை மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் வனத்துறையினர் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
English Summary
Young man injured in a tiger attack in mudumalai