சேலத்தில் பயங்கரம் - ஓரின சேர்க்கைக்கு அழைத்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


சேலத்தில் பயங்கரம் - ஓரின சேர்க்கைக்கு அழைத்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர் கைது.!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கொளஞ்சி. இவர் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழே தங்கி அங்குள்ள பகுதிகளில் கட்டிட வேலை பார்த்து வந்தார்.

இவர் தங்கியிருந்த அதே பகுதியில், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அவினாஷ் என்ற வாலிபரும் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அவினாஷ் நேற்றிரவு தரமணி லிங்க் சாலை அருகே கத்தியுடன் நின்று கொண்டு, `நான் கொலை செய்துவிட்டேன்' என்று காத்திக் கூச்சலிட்டுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவினாஷ் கொளஞ்சி என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து போலீஸார். உயிரிழந்த கொளஞ்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் கொலையாளி அவினாஷை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் கொளஞ்சி மற்றும் அவினாஷ் இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்து விட்டு வந்துள்ளனர்.

அப்போது கொளஞ்சி மது போதையில் அவினாஷை பார்த்து, நீ ஓரினச்சேர்க்கையாளர் தானே' என்று கூறி அவரை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துள்ளார். இதற்கு அவினாஷ் மறுப்பு தெரிவித்ததால், கொளஞ்சி அவரை ஆபாசமாக பேசி கிண்டல் செய்துள்ளார். 

இதில், ஆத்திரமடைந்த அவினாஷ் காய்கறி வெட்டும் கத்தியால் கொளஞ்சியை குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனை பதிவு செய்துகொண்ட போலீசார் அவினாஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து மேலும், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for kill man in salem


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->