பள்ளி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை! புதருகுள் சிக்கிய கஞ்சா பொட்டலங்கள்! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தில் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் தினந்தோறும் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மதுவிலக்கு அமலகத்துறை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

காஞ்சிபுரம் அருகே பாலசட்டிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுகாவேரிப்பாக்கம் நுகர்வோர் வாணிப கழகம் கிடங்கு அருகே புதரில்  தினந்தோறும் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது என அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அந்தப் பகுதியில் சென்று தீவிர சோதனை நடத்தினார். பின்னர்  குருநாதன், சிவகுமார் அதிகாரிகள் ஆகியோர் அந்தப் பணியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில்  சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த வேலு மகன் வெங்கடேசன் என்பதும்  கஞ்சா விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அந்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 1கிலோ 400  கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதனையடுத்து உடனடியாக வெங்கடேசனை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைந்ததுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrested for selling ganja in Kanchipuram area


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->