காதலை முறித்த ஆத்திரம் - சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை பகிர்ந்த வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


காதலை முறித்த ஆத்திரம் - சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை பகிர்ந்த வாலிபர் கைது.!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அருகே எஸ்.ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகேசன். இவர் சிங்கம்புணரி அருகே உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

அங்கு அதே கல்லூரியில் பயிலும், இவரை விட இரண்டு வயது மூத்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். அப்போது, இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

இதற்கிடையே இவர்களின் காதலை அறிந்த மாணவியின் பெற்றோர் அவரைக் கண்டித்ததில் அந்த மாணவி, அழகேசனுடன் இருந்த தனது காதலை முறித்துக் கொண்டுள்ளார். அதை ஏற்றுக்கொள்ள முடியாத அழகேசன், அந்த மாணவியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை, அவரை மிரட்டும் விதத்தில் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதையறிந்த அந்த மாணவி, காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் படி போலீசார் விசாரணை மேற்கொண்டு அழகேசனை கைது செய்தனர். பின்னர் அவரை சிங்கம்புணரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for share photos social media in sivakangai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->