2ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. இளைஞர் மீது பாய்ந்தது போக்சோ..! - Seithipunal
Seithipunal


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மை ரோடு பகுதியை சேர்ந்தவர் ரிஞின். இவரது சகோதரி தனது வீட்டிலேயே பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் வகுப்பு எடுத்து வருகிறார். டியூஷன் வகுப்பில் பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டியூஷனுக்கு வந்த இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று ரிஜின் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி தனது பெற்றோரிடம் இது பற்றி கூறியுள்ளார். இதைக் கேட்ட அவரது பெற்றோர் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த ரிஞினை கைது செய்தனர் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested In POCSO Near Kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->