பொதுமக்களிடம் ரகளை செய்த வாலிபர் - தட்டிக்கேட்ட போலீசாரை ஓட ஓட விரட்டிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


பொதுமக்களிடம் ரகளை செய்த வாலிபர் - தட்டிக்கேட்ட போலீசாரை ஓட ஓட விரட்டிய சம்பவம்.!

சென்னையில் உள்ள பெரவள்ளூர் ஜி.கே.எம். காலனி ஜம்புலிங்கம் மெயின் ரோடு சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் மது போதையில் அப்பகுதி மக்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

உடனே இந்த சம்பவம் குறித்துபோலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட வாலிபரை கண்டித்து வீட்டுக்கு செல்லும்படி கூறினர். ஆனால், அந்த வாலிபர் மதுபோதையில் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

அப்போது அந்த வாலிபர் திடீரென ரோந்து போலீசாரை ஓட ஓட விரட்டி கையால் சரமாரியாக தாக்கினார். அதன் பின்னர் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் போதை வாலிபரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். 

அந்த விசாரணையில், அந்த வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் என்பதும், இவர் மதுபோதையில், அப்பகுதியில் நின்றிருந்த மூன்று இருசக்கர வாகனங்களை அடித்து உடைத்ததும் தெரிய வந்தது. 

இதையடுத்து போலீசார், சாந்தகுமாரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், இளைஞர் ஒருவர் மதுபோதையில் போலீசாரை ஓட ஓட விரட்டி தாக்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth chased and attack police in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->