கன்னியாகுமரி: வேலைகிடைக்காத விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், திக்கணம்கோடு பகுதியில் வசித்து வருபவர் பகவத் (20).  இவர் டிப்பிளமோ இன் பெட்ரோ கெமிக்கல் படித்து விட்டு கடந்த ஓராண்டாக வேலை தேடி வந்துள்ளார்.

ஆனால், வேலை கிடைக்கவில்லை என தெரிகிறது. மேலும், அவர் காதலித்து வந்த பெண்ணும் காதலை ஏற்காததால் அவர் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விஷ மாத்திரை உண்டு மயங்கி கிடந்த அவரை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.  அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.

104

044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)

022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth commit suicide Near Kanyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->