தமிழகம்|| ரயிலில் கூட்டத்தினால் தவறி விழுந்த இளைஞர் மீட்பு..! - Seithipunal
Seithipunal


இன்று நாகர்கோவிலிருந்து கரூர் வழியாக கோவை செல்லும் விரைவு ரயிலில் வழக்கத்தை விட அதிகளவு கூட்டம் இருந்ததால், படியில் நின்றும் பயணம் செய்துள்ளனர். இந்த ரெயிலில், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் கோவையைச் சேர்ந்த சிக்கந்தர்பாட்ஷா என்ற இளைஞர் மதுரையில் இருந்து  கோவை சென்றார்.

இவர் கரூருக்கு 10 கி.மீட்டர் முன்பு புகைவண்டியிலிருந்து அதிகாலை 4 மணியளவில் தவறி கீழே விழுந்துள்ளார். இதுகுறித்து புகைவண்டியில் பயணம் செய்த சகபயணி ஒருவர் 101 மூலம் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து கரூர் நிலைய அலுவலர் சி.திருமுருகன் தலைமையிலான 8 பேர் கொண்ட தீயணைப்பு மீட்புப்பணிக் குழுவினர் விடியற்காலை 5.45 மணிப்போல மணவாடியில் இருந்து ரயில் இருப்புப்பாதை வழியே இளைஞரை தேடிக் கொண்டு 5 கி.மீட்டர் பயணம் செய்து செல்லாண்டிபட்டி என்ற இடத்தில் சிக்கந்தர் பாட்ஷாவை கண்டு பிடித்து மீட்டனர்.

உடம்பில் பல காயங்களுடன் இருந்த சிக்கந்தர்பாட்ஷாவை 108 ஆம்புலனஸிற்கு கொண்டு செல்வதற்காக ஸ்டெக்சர் மூலம் அரை கி.மீட்டர் தூரம் தூக்கி கொண்டு சென்றனர். 108 ஆம்புலன்ஸில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கரூர் புகைவண்டி போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth fell rescue due to crowed train


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->