மதுரையில் பயங்கரம் - முன் விரோதத்தால் நடுரோட்டில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை.! - Seithipunal
Seithipunal


மதுரையில் பயங்கரம் - முன் விரோதத்தால் நடுரோட்டில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை.!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே கடந்த வாரம் நடந்து முடிந்த சித்திரை திருவிழாவின் போது மோதல் நடந்துள்ளது.

இந்த நிலையில், ஆனந்த குமார் நேற்று காலை தனது இருசக்கர வாகனத்தில் தெற்குவாசல் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆனந்தகுமாரை வழிமறித்துள்ளனர். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தனது இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது ஆனந்தகுமாரை துரத்திய அந்த கும்பல் அவரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீஸார், ஆனந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அதில், ஆனந்தகுமார் தரப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் நடந்து முடிந்த சித்திரை திருவிழாவின் போது மோதல் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து போலீசார், பட்ட பகலில் இளைஞரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை மிகத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சடம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth kill in madurai for prior hostility


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->