செங்கோட்டையில் பரிதாபம் - பட்டப்பகலில் நகராட்சி அலுவலகத்தில் இளைஞர் வெட்டிக் கொலை.!! - Seithipunal
Seithipunal


செங்கோட்டையில் பரிதாபம் - பட்டப்பகலில் நகராட்சி அலுவலகத்தில் இளைஞர் வெட்டிக் கொலை.!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள, செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் ராஜேஷ். இவர், செங்கோட்டை நகராட்சி பகுதியில் தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்களை மேற்பார்வை செய்யும் பணி செய்து வந்தார். 

இந்த நிலையில் ராஜேஷ் நேற்று தனது சகோதரியை அழைத்துக் கொண்டு செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் விட்டு விட்டு அங்கு வளாகத்தின் ஒரு பகுதியில் இருசக்கரவாகனத்தை நிறுத்தி விட்டு காத்திருந்துள்ளார். அப்பொழுது, அங்கு வந்த இரண்டு நபர்கள் திடீரென ராஜேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். 

இதனால், பலத்தக் காயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல்அளித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து ராஜேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதற்கிடையே ராஜேஷின் உறவினர்கள் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு உள்ள சாலையில் அமர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய கோரி மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக நாங்குநேரி பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவரது மகனான மாரி மற்றும் நெல்லை விளாகம் பகுதியை சேர்ந்த சுடலை என்பவரது மகன் மந்திரமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜேஷிற்கும், ரயில்களில் டீ விற்பனை செய்து வந்த நாங்குநேரி பகுதியை சேர்ந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜேஷம் அவரது நண்பர்களும் சேர்ந்து தாக்கியதில், டீ விற்கும் நபர் ஒருவர் படுகாயமடைந்தார். இதற்கு பழிவாங்கவே இந்த கொலை நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth kill in sengottai municipal office complex


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->