கொடூரம்! பாலத்தில் கிடந்த வாலிபரின் தலை! பதற்றத்தில் ராஜபாளையம்!
Youth killed by beheading near Rajapalayam
ராஜபாளையம் அருகே தலை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் சேர்ந்தவர் பூவையா. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இவர் மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வழக்கம் போல் மாடுகளை ஓட்டிக்கொண்டு ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மேச்சலுக்காக கூட்டி சென்றதாக கூறப்படுகிறது.
மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டி சென்ற பூவையா இரண்டு நாட்கள் ஆகியும் வீட்டுக்குத் திரும்பி வராததால் பதற்றம் அடைந்த அவரது மனைவி இது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
கணவரை காணவில்லை என மனைவி சேதுர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை பூவையாவை பல்வேறு பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் மேய்ச்சலுக்காக மாடுகளை ஓட்டி சென்ற மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார்கோவிலுக்கு அருகே உள்ள சாலையில் ஒரு பாலத்தின் அடியில் வாலிபர் தலை ஒன்று துண்டிக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற ராஜபாளையம் வடக்கு போலீசார் வாலிபரின் தலை மட்டும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மோப்ப நாய்கள் வர வைக்கப்பட்டு மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்தலில் மற்றொரு இடத்தில் உடல் கிடப்பதை கண்டுபிடித்தனர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் முதல் கட்ட விசாரணையில் இவர் இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன பூவையா என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து காவல்துறை கொலையாளிகளின் தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
English Summary
Youth killed by beheading near Rajapalayam