இனி நான் தான் தலைவன்.. ரவுடிகளுக்கிடையே நடந்த தகராறில் இளைஞர் படுகொலை.. திருப்பூரில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


கேங்க் லீடர் யார் என்ற தகராற்றில் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் செவந்தாம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் சுரேஷ் . இவரது நண்பர்கள் கே.செட்டிப்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ், மணிகண்டன், குணா, அறிவுபிரகாஷ், பிரவீன்குமார் உள்ளிட்டோர் மீது அடிதடி உள்ளிட்டபல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்னிலையில், நண்பர்கள் ஐவரும் அங்குள்ள  மதுபான கடையில் மது அருந்தியுள்ளனர். அப்போது சுரேஷ் நண்பர்களிடம் நான் தான் உங்களுக்கு தலைவன். நான் சொல்வதைத் தான் இனி நீங்கள் கேட்க வேண்டும். நான் சொல்கிறபடி எதிராளிகளை நீங்கள் அடிக்க வேண்டும். நான் தான் உங்களுக்கு பணம் பெற்று கொடுக்கிறேன் அதனால், எனக்கு கட்டுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஆனால், அதற்கு அவர்கள் மறுக்கவே அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  ஒருகட்டத்தில் தகராறு முற்றவே 5பேரும் சேர்ந்து பட்டா கத்தியால் சுரேசை சரமாரியாக வெட்டினர். இதில், சுரேசின் தலையில் பலத்தவெட்டு விழுந்தது. இதனால், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர் சடலமாக கிடந்ததை கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் ஐவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth Killed in Thiruppur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->