இளம் பெண்ணை முத்தமிட்ட பிறகு திருமணத்திற்கு வாலிபர் மறுப்பு!....நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன? - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தன் மீது பதியப்பட்ட வழக்கிணை  ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தார்.

மேலும் அந்த வாலிபருக்கு  20 வயது ஆகும் நிலையில், இவரும் 19 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் சந்தித்த போது, அவர் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும், பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும் கூறி வாலிபர்  மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வளரிளம்  பருவத்தில் காதலிக்கும் இருவர் கட்டிப்பிடிப்பது அல்லது முத்தமிடுவது இயல்பானதாகவே பார்க்கப்படுகிறது என்றும், இந்த விவகாரம் எந்த விதத்திலும், இந்திய தண்டனை சட்டம் 354-ஏ(1) உட்பிரிவின் கீழ் குற்றமாக அமையாது என்று கூறிய அவர்,   மனுதாரர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது என்று உத்தரவிட்டார்.

ஆகவே மனுதாரர் மீது நடவடிக்கைகளை தொடர்வது, சட்ட துஷ்பிரயோகமாக அமையும் என்று கூறிய நீதிபதி, மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth refuses marriage after kissing young girl what is the court order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->