திருவள்ளூர் அருகே பயங்கரம்..! கஞ்சா விற்பனை மோதலில் வாலிபர் வெட்டிக்கொலை..! 3 பேரிடம் விசாரணை...! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மோதலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த தண்டுமாநகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்(25). இவர் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் பிரவீனை பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். இந்நிலையில் பிரவீன் பூதூர் பகுதியில் உள்ள ஏரியில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இதைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த பிரவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் கஞ்சா விற்பனை மோதலில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், கஞ்சா விற்பனை செய்து வந்த பெரியபாளையத்தை சேர்ந்த ஒருவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த சிலர் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் பிரவீன் தலையிட்டதால், கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதைத்தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth was hacked to death in a ganja sale conflict in tiruvallur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->