இப்படியுமா நடக்கும்? உரிமையாளர் வீட்டில் புகுந்த வாலிபர்கள்!!! பட்டாகத்தியை கொண்டு சூரையாடல்!!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் கொங்கு மெயின் ரோடு ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் என்பவர். இவர் பில்டிங் காண்ட்ராக்டராக பணிபுரிகிறார். இவர் கடந்த 50 ஆண்டுகளாக இப்பகுதியில் வாழ்ந்து வருகிறார். மேலும் 4 வீடுகள் வைத்திருக்கும் இவர் முதல் 2 வீடுகளில் தனது குடும்பத்துடன் தங்கி வருகிறார்.மீதமுள்ள 2 வீடுகளை வாடகைக்கு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் குடும்பத்துடன் ஒருவர் கடைசி வீட்டிற்கு குடிவந்துள்ளார்.அதுமட்டுமின்றி 10 நாட்களுக்கு முன்பாக ராஜபாளையத்தைச் சேர்ந்த அலெக்ஸ் மற்றும் மதுரையை சேர்ந்த சக்திவேல் என்ற 2 வாலிபர்கள் குடிவந்துள்ளனர்.பிரிண்டிங் நிறுவனத்தில் பணியாற்றும் இவர்களுக்கும் அருகிலுள்ள குடும்பத்தினருக்கும் இடையே லேசான வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் பேச்சுவார்த்தை நடத்திய வீட்டின் உரிமையாளர் சேகர், குடும்பத்தினருக்கு ஆதரவாக பேசுவதாக எண்ணிய வாலிபர்கள் இருவரும் நேற்று இரவு மது போதையில் அரிவாளுடன் சேகரின் வீட்டிற்கு சென்று கதவை உடைத்தநர்.மேலும் வீட்டிலுள்ள பொருட்களை, டி.வி., சின்டெக்ஸ் டேங்க், கதவு ஜன்னல்களை பட்டா கத்தியால் வெட்டி சேதப்படுத்தினர்.

அப்போது சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் அனைவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.இதுகுறித்து சேகர் திருப்பூர் வடக்கு காவலில் புகார் செய்தார். இதில் காவலர்கள் விசாரணை நடத்தி அலெக்ஸ் மற்றும் சக்திவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் வாடகைக்கு குடி வந்த 10-ம் நாள் உரிமையாளர் வீட்டை பட்டா கத்தி கொண்டு இளைஞர்கள் சூறையாடிய சம்பவத்தின் சிசிடிவி., காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி திருப்பூரில் அதிர்ச்சியையம் ஆச்சர்யத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youths entered the owners house and fought with knife


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->