கன்னியாகுமரி அருகே பரபரப்பு.! முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்கள்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் முகவரி கேட்பது போல் நடித்து வாலிபர்கள் பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மறுகால் தலைவிளை பகுதியை சேர்ந்த தங்க கிருஷ்ணன் என்பவரது மனைவி விஜய நிர்மலா(40). இவர் நேற்று கார்த்திகை வடலி அருகே ஆடுகளுக்கு புல்லறுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள், விஜயநிர்மலா அருகில் சென்று மோட்டார் சைக்கிள் ரிப்பேர் ஆகிவிட்டது, இங்கு ஒர்க்ஷாப் எங்கு உள்ளது என்று கேட்டுள்ளனர். 

இதனால் விஜய் நிர்மலா அவர்களுக்கு முகவரி கூறிக்கொன்டிருந்தார். அப்போது திடீரென அவர்கள் 2 பேரும் விஜய நிர்மலா காதில் அணிந்திருந்த கம்மலை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த விஜய நிர்மலா சத்தம் போட்டதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

ஆனால் அவர்கள் வருவதற்குள் 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக ராஜாக்க மங்கலம் காவல் நிலையத்தில் விஜய நிர்மலா புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கம்மலை அறுத்துச் சென்ற இரண்டு வாலிபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youths stole jewelry from the woman in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->