யூடியூபர் டி.டி.எப்.வாசனின் பைக்கிற்கு முடிவு கட்டிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி!
YouTuber TTF Vasan bike burnt Madras High Court judge opined
சென்னை-வேலூர் நெடுஞ்சாலையில் வேகமாகவும் கவனக்குறைவாகவும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதாக பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் பதிந்த வழக்கின் அடிப்படையில் யூடியூபர் டி.டி.எப்.வாசன் செப்டம்பர் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் டி.டி.எப்.வாசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது காவல் துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், மனுதாரரை யூட்யூபில் 45 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர் என்றும், 20 லட்சம் மதிப்புடைய பைக்கில் 2 முதல் 4 லட்சம் ரூபாய் பாதுகாப்பு உடை அணிந்திருந்தால் இந்த விபத்தில் அவர் உயிர் தப்பி இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
இதனை பார்க்கும் மற்ற இளைஞர்களும் அவர்களது பெற்றோரிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை கேட்டு வாங்கி இது போன்ற அபாயகரமான சாகசங்களில் ஈடுபடுகின்றனர்.
மேலும் சிலர் கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபடுவதாக தெரிவித்தார். இதனைப் பதிவு செய்த நீதிபதி விளம்பரத்திற்காகவும் மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்படும் மனுதாரரின் செயல் ஒரு பாடமாக அமைய வேண்டும் என டி.டி.எஃப் வாசன் தொடர்ந்து நீதிமன்ற காவல் இல்லையே இருக்கட்டும் எனவும் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.
மனுதாரரின் கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மனுதாரரின் யூடியூப் தளத்தை மூடிவிட்டு அவரது இரு சக்கர வாகனத்தை எரித்து விட வேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
English Summary
YouTuber TTF Vasan bike burnt Madras High Court judge opined