தரவுகளைத் திருடிய 348 சீன செயலிகள் முடக்கம்.! - Seithipunal
Seithipunal


ஸ்மார்ட்போன்களில் தரவிறக்கம் செய்யப்படும் செயலிகள் மூலம் தரவுகள் திருடப்படுகின்றனவா? என பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்தார்.

அதில், "சீன தயாரிப்புகளான 348 செயலிகள் தரவுகளைத் திருடியுள்ளன. அவற்றை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு கொண்டு சென்றோம். இதன் பின்னர், அச்செயலிகள் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வர முடியாதபடி இதுவரை 348 சீன செயலிகள் முடக்கப்பட்டுள்ளது". என்று அவர் தெரிவித்துள்ளார்.

தரவிறக்கம் செய்யப்பட்டுள்ள செயலிகள் சீனாவை மையமாகக் கொண்டிருந்தாலும் அச்செயலிகள் பல்வேறு நாடுகளில் இருந்து தயாரிக்கப்பட்டவை என்று மத்திய அரசின் எழுத்துப்பூர்வ ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

348 Chinese apps stole data are suspended


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->