தமிழக கிராமங்களில் பிஎஸ்என்எல் 4ஜி மொபைல் சேவை - மத்திய அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் 24,680 கிராமங்களுக்கு பி.எஸ்.என்.எல் 4ஜி மொபைல் சேவையை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரியில் ஒரு கிராமத்தில் 4ஜி மொபைல் சேவை வழங்க உள்ளனர். 

பிஎஸ்என்எல் நிறுவனத்தை 1.64 லட்சம் கோடி மதிப்பில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்திற்கும், நாட்டின் 4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் ரூ. 26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 24 ஆயிரத்து 680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை வழங்கப்பட உள்ளது. 

தமிழ்நாட்டில் அரியலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கருவூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி உட்பட மொத்தம் 31 மாவட்டங்களில் உள்ள 534  கிராமங்களுக்கு பிஎஸ்என்எல் 4ஜி மொபைல் சேவை வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSNL 4G in Tamilnadi


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->