"நியூராலிங்க் சிப்" இரண்டாவது மனிதருக்குப் பொருத்தப் போவதாக அறிவித்த எலான் மஸ்க்..!!
Elon Musk Says Super Power Neuralink Chip Will Be Fixed to Second Person
எலான் மிஸ்கின் "நியூராலிங்க்" நிறுவனம், விரைவில் தனது சிப்பினை இரண்டாவது நபருக்கு பொருத்தவுள்ளதாக நேற்று அறிவித்துள்ளது.
எலான் மஸ்கின் 'பிரைன் - கம்பியூட்டர்' ஸ்டார்ட் அப் நிறுவனமான "நியூராலிங்க்" , கடந்த ஜனவரி மாதம் மனிதரின் மூளையில் சோதனை அடிப்படையில் சிப் பொருத்தியது. இந்த சிப்பை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோலண்ட் என்ற 29 வயது இளைஞர் பொருத்திக் கொண்டார்.
இந்நிலையில் தற்போது இரண்டாவது நபருக்கு சிப் பொருத்துவற்கான அனுமதியை அமெரிக்காவின் எப்டிஏ நிறுவனத்திடமிருந்து "நியூராலிங்க்" நிறுவனம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து "நியூராலிங்க்" நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இப்போது இரண்டாவது நபருக்கு மூளைக்குள் சிப் பொறுத்தவுள்ளோம். விரைவில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். இந்த பணி நிலையாக தொடர்ந்து நடைபெறும்.
இது மனிதர்களுக்கு அதிக சக்தியை தருவதோடு, டிஜிட்டல் நுண்ணறிவுக்கும், மனித நுண்ணறிவுக்கும் இடையே ஒரு நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தும். இதற்காக மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, திசுக்கள் இயல்புக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு "நியூராலிங்க்" நிறுவனம் குரங்குகளுக்கு இந்த சிப்பை பொருத்தி சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து தற்போது மனிதர்களுக்கு பொருத்தி சோதனையை தொடர்ந்து வருகிறது. மேலும் இந்த சோதனை அடிப்படையிலான ஆய்வுகள் மேலும் 5 ஆண்டுகள் தொடரும் என்று தெரிய வந்துள்ளது. இதனிடையே இந்த சிப்பை இரண்டாவது நபருக்கு பொருத்துவதற்கான அனுமதியை நியூராலிங்க் நிறுவனம் கடந்த மே மாதம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Elon Musk Says Super Power Neuralink Chip Will Be Fixed to Second Person