பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வந்தது ப்ளூ-டிக் சந்தா முறை! மாதம் எவ்வளவு தெரியுமா?! - Seithipunal
Seithipunal


ட்விட்டர் சமூக வலைத்தளம் போலவே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு 'அதிகாரப்பூர்வ பதிவர்' என்பதை குறிக்கும் ப்ளூ-டிக் பெறுவதற்கான சந்தா முறையை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

முதல் கட்டமாக அமெரிக்க நாட்டில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பயனாளர்களுக்கு சந்தா செலுத்தி பெற்றுக் கொள்ளும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஊடகங்கள், சமூக வலைதள இன்புளுயன்சர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் இந்த ப்ளூ-டிக் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது பயனர்களும் தங்களுக்கு விருப்பம் இருந்தால் சந்தா கட்டி ப்ளூ-டிக் முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சோதனை முறையில் மெட்டா நிறுவனம் அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ள இந்தத் திட்டத்தின் படி, வலைத்தளங்களின் பயன்பாட்டுக்கு மாதாந்திர கட்டணமாக 989 ரூபாயும், மொபைல் ஆப் ஸ்டோர் பயன்படுத்தினால் 1237 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்துள்ளது.

இதற்கு அரசு வழங்கிய அடையாள அட்டையை சமர்ப்பித்து பயனர்கள் இந்த ப்ளூ-டிக் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

FaceBOOK Insta Also Blue Tic Option in


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->