போன்பே, கூகுள்பே, பேடிஎம் பயணர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதை உடனே பண்ணுங்க! - Seithipunal
Seithipunal


டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நாடுகளில் வரிசையில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. ஆனால் அதே நேரம் இவற்றின் மூலம் பல ஆன்லைன் மோசடிகளும் நடைபெறுகிறது.

இதனால் பல அப்பாவி மக்கள் பணத்தை இழந்து தவிக்கின்றனர். நாம் ஏதேனும் ஒரு லிங்க்கை கிளிக் செய்தால் அல்லது செயலியை டவுன்லோட் செய்தால், அதன் மூலம் நம்முடைய யுபிஐ மற்றும் வங்கிக் கணக்கின் விவரங்கள் ஹேக்கர்களிடம் செல்ல வாய்ப்புள்ளது. எனவே தேவையற்ற லிங்குகளை கிளிக் செய்வதையும், மூன்றாம் தரப்பு செயலிகளை டவுன்லோட் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

மேலும் இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டுமென்றால், யுபிஐ செயலிகளை சரியான முறையில் லாக் செய்வதோடு, முடிந்தவரை இரண்டடுக்கு பாதுகாப்பு வசதியையும் ஆன் செய்து வைத்துக் கொள்வது நல்லது. சில சமயம் ஹேக்கர்கள் உங்கள் மொபைலில் உள்ள எஸ்எம்எஸ் செயலியை சுலபமாக ஹேக் செய்து, அதில் வரும் ஓடிபி மெசேஜை திருடி விட முடியும். எனவே யூபிஐ செயலிகளில் பயோமெட்ரிக் பாதுகாப்பை ஆன் செய்து வைத்துக் கொள்வது பாதுகாப்பானதாகும்.

இதன் மூலம் ஒவ்வொரு முறை நீங்கள் யுபிஐ செயலிகளுக்குள் நுழைய முயற்சிக்கும் போதும் உங்களது பயோமெட்ரிக் ஆக்சஸ் பயன்படுத்தி மட்டுமே உள்ளே நுழைந்து யுபிஐ செயலியை பயன்படுத்த முடியும். எனவே கைரேகை அல்லது ஃபேஸ் ரெக்ககனைசேஷன் போன்ற முறைகளை பயன்படுத்தி மட்டுமே யுபிஐ செயலிகளை அன்லாக் செய்து பயன்படுத்த முடியும். கூகுள்பே, போன்பே, பேடிஎம் செயலிகளில் பயோமெட்ரிக் பாதுகாப்பை எவ்வாறு ஆன் செய்வது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

கூகுள் பே இல் பயோமெட்ரிக் லாக் ஆன் செய்யும் முறை-

முதலில் கூகுள் பேவை ஓபன் செய்து, அதில் உங்களது ப்ரோபைல் போட்டோவை கிளிக் செய்து, பின் செட்டிங் ஆப்ஷனை தேர்வு செய்யவும். அதில் இருக்குமு் பிரைவேசி & செக்யூரிட்டி என்பதைத் தேர்வு செய்து, செக்யூரிட்டி ஆப்ஷனை தேர்வு செய்யவும். இப்போது யூஸ் ஸ்கிரீன் லாக் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, யூஸ் ஃபிங்கர் பிரிண்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். அதன் வழிகாட்டுதலை பின்பற்றி உங்கள் கைரேகையை பதிவு செய்யவும். பின்பு கண்டினியூ என்ற ஆப்ஷனை தேர்வு செய்து டர்ன் ஆன் பயோமெட்ரிக் லாக் என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் போதும், பயோமெட்ரிக் ஆன் செய்யப்பட்டுவிடும்.

பேடிஎம் இல் பயோமெட்ரிக் லாக் ஆன் செய்யும் முறை-

பேடிஎம் செயலியை ஓபன் செய்து செய்து, அதில் ப்ரொபைல் பிக்சரை கிளிக் செய்து செக்யூரிட்டி என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.பின்னர் பயோமெட்ரிக் லாக் என்பதை கிளிக் செய்து எனேபில் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது இதில் உங்களுக்கு விருப்பமான பயோ மெட்ரிக் லாக்கை ஆன் செய்து கொள்ளவும்.

​போன் பே இல் பயோமெட்ரிக் லாக் ஆன் செய்யும் முறை-

போன் பே செயலியை ஓபன் செய்து, ப்ரொபைல் பிக்சரை கிளிக் செய்து, செக்யூரிட்டி ஆப்ஷனை தேர்வு செய்யவும். அதில் ஸ்கிரீன் லாக் ஆப்ஷனை தேர்வு செய்து எனேபிள் ஸ்கிரீன் லாக் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களுககு வேண்டிய  பயோமெட்ரிக் முறையை தேர்வு செய்து, பயோமெட்ரிக் லாக்கை ஆன் செய்து கொள்ளவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Important notice for phonepe googlepay paytm travelers do it now


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->