இன்பினிக்ஸ் புதிய நோட் 12 ப்ரோ - ரூ.1500 வரை தள்ளுபடி.!
Infinix Note 12 Pro
இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் புதிய நோட் 12 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனின் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
விலை விவரங்கள்:
இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்குகிறது. அறிமுக சலுகையாக ரூ. 1500 வரை தள்ளுபடி மற்றும் 500 சூப்பர் காயின் வழங்கப்படுகிறது.
இதன் சிறப்பு அம்சங்கள்:
* இதில், 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன் கார்னிங் கொரில்லா கிளாஸ் மற்றும் 3 ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
* மேலும், 8 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
* டூயல் சிம் ஸ்லாட் ஆண்ட்ராய்டு 12 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 10.6 டூயல் சிம் வழங்கப்பட்டுள்ளது.
* இத்துடன், 108MP பிரைமரி கேமரா, f/1.75, குவாட் எல்இடி பிளாஷ் 2MP டெப்த் சென்சார் மற்றும் AI லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
* 16MP செல்பி கேமரா மற்றும் டூயல் எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.
*மேலும், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
* இதனுடன், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது.
* டிடிஎஸ் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை மற்றும் ப்ளூடூத் 5 யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டுள்ளது.
* 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
* இந்த ஸ்மார்ட்போன் ஆல்பைன் வைட், வொல்கானிக் கிரே மற்றும் டஸ்கனி புளூ என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.