அதிரடி அம்சங்களுடன்... பட்ஜெட் விலையில் NOTE 40 pro சீரிஸ்.! இன்று முதல் இந்தியாவிலும்...
Infinix note 40 series launched India
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் நோட் 4 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் நோட் 40 ப்ரோ 5 ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களிலும் மீடியா டெக் டிமாண்ட்சிட்டி 7020 ப்ராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
இதனுடன் இன்பினிக்ஸ் நிறுவனத்தின் சொந்த சீட்டா எக்ஸ்1 பவர் மேனேஜ்மென்ட் சிப் வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் 108 எம் பி பிரைமரி கேமராவுடன் 3 கேமரா சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி மாடலில் 5000mah பேட்டரி, 45 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ ப்ளஸ் மாடலில் 4600 சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மாடல்களும் மார்ச் மாதம் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 24,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபோன் அப்சிடியன் பிளாக் மற்றும் வின்டேஜ் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.
இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி மாடலின் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 21,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஃபோன் வின்டேஜ் கிரீன் மற்றும் டைட்டன் கோல்டன் நிறங்களில் கிடைக்கிறது. இரு மாடல் ஃபோன்களும் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.
English Summary
Infinix note 40 series launched India