ALLERT : ஆண்ட்ராய்டு மொபைல் போனில் தகவல் திருட்டு; 300-க்கும் மேற்பட்ட செயலிகளை முடக்கிய கூகுள்..! - Seithipunal
Seithipunal


ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்துடன் விளம்பரங்களில் மோகத்தாழும் சில மொபைலின் அத்தியாவசிய இலகு தேவைகளுக்காகவும், கூகுளின் ப்ளே ஸ்டோரில் இருந்து ஏராளமான செயலிகளை பதிவிறக்கம் செய்கின்றோம்.

இந்நிலையில், பயனாளிகளுக்கு தெரியாமலேயே மொபைல் போனிலிருந்து அவர்களின் தகவலை திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால்,  300-க்கும் மேற்பட்ட இவ்வாறான மோசடி செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.

இதனால் ப்ளே ஸ்டோரில் உள்ள செயலிகளை கூகுள் நிறுவனம் அவ்வபோது சோதனை செய்வதோடு, அதில் பிரச்னைகளுக்கு உள்ளாகும் செயலிகள் உடனடியாக நீக்கி அதிரடி காட்டுகிறது.  இவற்றில் பல செயலிகள் மோசடி செய்பவருக்கு உதவியதாக இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறித்த செயலிகள், பயனர்களின் தனிப்பட்ட தகவலை திருடுவதோடு, அவர்களின் கிரெடிட் கார்டு உள்ளிட்ட நிதி தொடர்பான தகவல்களை மோசடியாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன்,  20 கோடி போலி விளம்பரங்களை உருவாக்கி அதில் பணம் சம்பாதித்துள்ளதாகவும்,  இதனால் விளம்பர நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறான செயலிகள் மருத்துவம், க்யூ ஆர் ஸ்கேனர், வால்பேப்பர், கண்காணிப்பு செயலிகள் என்ற பெயரில் செயல்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறித்த செயலிகள் மொபைல் போனில் அனைத்து நேரமும் பின்னால் இருந்து செயல்பட்டு தகவல்களை திருடி வந்துள்ளது. அவற்றை யாராலும் கண்டுபிடிக்க முடியாத நிலையிலும் அந்த செயலிகள் செயல்பட்டுள்ளன.

இதனையடுத்து, தற்போது ஆண்ட்ராய்டு 13 பதிப்பு பயன்படுத்துவார்கள் தங்களது சாதனத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Information theft on Android mobile phones Google has removed more than 300 apps from the play store


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->