ஜியோ வைபை மெஷ் எக்ஸ்டெண்டர் அறிமுகம்.! - Seithipunal
Seithipunal


இந்திய சந்தையில் முன்னணி டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனம், பைபர் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்காக ஜியோபைபர் பெயரில் தனி பிராண்டை உருவாக்கி உள்ளது. 

நாட்டின் முன்னணி பைபர் பிராட்பேண்ட் நிறுவனமான ஜியோபைபர் நாடு முழுவதும் பைபர் பிராட்பேண்ட் வழங்குவதில் அதிவேகமாக செயல்பட்டு வருகிறது. 

இத்துடன், ஒடிடி பலன்கள் அடங்கிய சலுகைகள், இலவச ஜியோ செட் டாப் பாக்ஸ் என ஏராளமான சேவைகளையும் வழங்கி உள்ளது. இவை அனைத்திற்கும் அதிவேக இணைய வசதி அவசியம் ஆகும்.

 

சிலருக்கு தங்களின் வீட்டில் அனைத்து இடங்களிலும் வைபை கவரேஜ் சிறப்பாக இருக்காததால் நெட்வொர்க் கனெக்டிவிட்டி சரிவர இருக்காது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஜியோபைபர், வைபை மெஷ் எக்ஸ்டெண்டர் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எக்ஸ்டெண்டர் JCM0112 என அழைக்கப்படுகிறது. 

இதன் விலை 2,499 ரூபாய் மட்டுமே. இதனை மிக எளிய மாத தவணை முறை வசதியிலும் வாங்க முடியும். இதற்கான மாத தவணை மாதம் ரூ. 86.62 முதல் துவங்குகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Introducing Jio WiFi Mesh Extender


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->