இனி எல்.ஐ.சி அப்டேட்டுகளை வாட்ஸ் அப்பில் பெறலாம்.! ஹாய் சொன்னால் போதும்.! - Seithipunal
Seithipunal


வாட்ஸ் அப் மூலமாக எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு தகவல்களை கொடுக்கும் சேவையை எல்ஐசி நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கின்றது.

இது குறித்து LIC நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, " வாட்ஸ்ஆப் செயலியைப் பயன்படுத்தி, தங்களது பாலிசி தொடா்பான தகவல்களை வாடிக்கையாளா்கள் பெறுவதற்கான வசதியை எல்ஐசி நிறுவனத் தலைவா் எம்.ஆா்.குமாா் தொடங்கியுள்ளாா்.

இந்த புதிய சேவையைப் பெறுவதற்காக, எல்ஐசி-யின் 8976862090 என்ற எண்ணுக்கு பாலிதாரா்கள் 'Hi' என்று வாசகத்தை அனுப்ப வேண்டும்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் வரும் பட்டியலில் இருந்து, பிரீமியம், போனஸ், பாலிஸி நிலவரம், கடன், வட்டி போன்றவற்றிலிருந்து ஏதாவது ஒன்றைத் தோ்ந்தெடுத்து, அது தொடா்பான விவரங்களை பாலிசிதாரா்கள் பெறலாம்.

எல்ஐசி-யின் வலைதளத்தில் தங்களது பாலிசிகளைப் பதிவு செய்துகொண்டுள்ள வாடிக்கையாளா்கள் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LIC Whatsap update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->