வளிமண்டலம் இல்லாத போதும் விண்வெளியில் எவ்வாறு ஒரு விண்கலம் நகருகிறது.?!
Spaceship how To raid
உண்மையில் ஒரு பொருள் நகர்வதற்கு வளிமண்டலமோ... வேறொரு ஊடகமோ தேவையே இல்லை. நாம் நகர்வது, நியூட்டனின் மூன்றாம் விதியினால்.
ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு என்பது தான் நியூட்டனின் மூன்றாவது விதி. விசையும் எதிர்விசையும் எப்போதும் இரு வேறு பொருட்கள் மீது செயல்படுகின்றன.
உதாரணத்திற்கு, மட்டையால் ஒரு பந்தை அடிக்கும் பொழுது, மட்டையினால் பந்தின் மீது ஒரு விசை செயல்புரிகின்றது, அதற்காக எதிர்விசையானது பந்தினால் மட்டையின் மீது செயல்புரிகின்றது.
மனிதர்கள் தரையில் நடப்பதற்கும் கூட இதுதான் அடிப்படை விதி. அடுத்த முறை நீங்கள் நடக்கும் பொழுது கவனித்து பாருங்கள், உங்களை முன் செலுத்த நீங்கள் காலால் தரையைப் பின்னாகத் தள்ளுகின்றீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
மேலும், நீச்சல் அடிக்கும்போது இதை இன்னும் நன்றாக உணர முடியும்
வானூர்திகள் இப்படி புவியீர்ப்பிற்குள்ளேயே இயங்கும்படி (பறக்கும்படி) வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் முன்னால் செல்வதைவிட பெரும் சவாலாக இருப்பது கீழே விழாமல் மிதப்பது தான்... இதற்கு வளிமண்டலத்தின் தேவை கட்டாயம் இருக்கின்றது.
விண்வெளியில் புவியீர்ப்பு விசைகள் இல்லை, எனவே, அங்கே 'விழுவது" எனும் சிக்கலுக்கே வேலை இல்லை.
விண்வெளியைப் பொறுத்தவரை ஒரு பொருள் தான் சென்று கொண்டிருக்கும் திசையை மாற்ற தான் விசை தேவை, தொடர்ந்து ஒரே திசையில் இயங்க எந்த விசையும் தேவை இல்லை. (இது நியூட்டனின் முதல் விதியாகும்)
எனவே, முன்னோக்கி நகருகின்ற ஒரு விண்கலம் முன்னோக்கி நகர்ந்துகொண்டே, தான் இருக்கும், அதனை மற்றொரு விசையை வைத்து திருப்பும் வரையோ அல்லது அதன் விரைவைக் குறைக்கும் வரையிலோ அதன் நகர்தலில் எந்த மாற்றமும் இருப்பதில்லை.
அப்படி வேறு திசைக்கு மாற்ற வேண்டுமெனில், அப்போது, அந்த விண்கலத்தில் இருக்கின்ற 'முடுக்கி"கள் சிறிய அளவில் தான் எரிபொருளை வெளியேற்றுகின்றன.
அப்படி வெளியேறும் எரிபொருள் மிக விரைவாக வெளியேறுகின்றது. இந்த வெளியேற்றம் விண்கலம் மற்றும் அந்த எரிபொருளின் மீது செலுத்தும் விசையினால் நிகழ்வதாகும்.
நியூட்டனின் மூன்றாவது விதிப்படி எரிபொருள் விண்கலத்தின் மீது எதிர்விசையைச் செலுத்துகின்றன. அந்த எதிர்விசை விண்கலத்தை முன்னோக்கிச் செலுத்தவோ, விரைவைக் குறைக்கவோ, அல்லது திசை திருப்பவோ பயன்படும். முடுக்கிகள் விண்கலத்தின் முன், பின், பக்கவாட்டில் என ஏறத்தாழ எல்லாப் புறத்திலும் அமைந்திருக்கும்.