வீட்டு வேலைகளை செய்து அசத்தும் ரோபோ... பாலிடெக்னிக் மாணவனின் அற்புதமான கண்டுபிடிப்பு.! - Seithipunal
Seithipunal


மேற்குவங்க மாநிலத்தின் பாக்டோக்ரா என்ற பகுதியை சார்ந்த இரண்டாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் வீட்டு வேலை செய்யும் ரோபோ ஒன்றை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்.

இந்த மாணவருக்கு சிறுவயதிலிருந்தே சத்தியஜித்ரேவின் கதைகளில் வரும்  பேராசிரியர் ஷங்குவின் விதுசேகர் இவருக்கு பிடித்த கதாபாத்திரமாகும். தனது ரோபோவிற்கும் இவர் விதுசேகர் என்று பெயர் வைத்திருக்கிறார்.

இரண்டாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவரான தேபாசிஷ் தத்தா தனது ரோபோவை ஒரு மல்டி டாக்கிங் ரோபோ ஆக வடிவமைத்திருக்கிறார். சி ப்ரோக்ராமிங் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ பல்வேறு விதமான பணிகளையும் செய்கிறது.

இந்த ரோபோ உணவுகளை வழங்குவதற்கும் டெலிவரி செய்வதற்கும் உதவுகிறது. மேலும் இது நிகழ்ச்சிகளின் போது பரிசுகளை வழங்கவும் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு விருந்தளிக்கவும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ரோபோவானது சி ப்ரோக்ராமை பயன்படுத்தி பாலிடெக்னிக் மாணவரான தேபாசிஷ் தத்தாவால் முழுவதுமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal Polytechnic student amazing invention is an amazing robot that does household chores


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->