வாய்க்கு வந்த படி பேசுவதாக? வீடியோவில் வெளுத்து வாங்கிய கஸ்தூரி.!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமா நடிகைகள் குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி ராஜூ பொதுவெளியில் அவதூறாக பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. குறிப்பாக திமுகவை சார்ந்த செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இருந்தார்.

இந்நிலையில் ஏ.வி ராஜாவுக்கு எதிராக கண்டன குரல் வலுத்த நிலையில் இயக்குநர் சேரன் நடிகர் சங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி "வாய், நாக்கு இருக்கு என்பதற்காக வாய்க்கு வந்தபடி பேசுவதா? தங்களது நேர்மையே பரிசு சாற்ற வேண்டிய இடத்தில் யாரும் இல்லை. அதிமுக முன்னாள் ஒன்றிய செயளாலர் பார்க்காத ஒரு விஷயத்தை பார்த்து மாதிரி எல்லாம் எப்படி பேசலாம்? அவருக்கு அவரது கட்சி தலைவருடன் பிரச்சினை இருக்கலாம் அதற்காக நடிகைகளை பற்றி பேசுவதா?

அவதூறாக பேசிய ஏ.வி ராஜு மீது சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்" என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் நடிகை கஸ்தூரி. நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் நடிகை திரிஷா இடையிலான விவகாரம் அடங்கிய நிலையில் தற்போது திரிஷா அரசியல் விவகாரங்களில் சிக்கியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress kasthuri condemned former aiadmk admin avraju


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->