சந்திராயன்-3 எடுத்த முதல் வீடியோ.!! உலகமே வியந்து பார்த்த தருணம்.!! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் உருவாக்கி எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதையை நீட்டிக்கும் பணிகள் தற்போதும் நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூலை 26 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் 5வது முறை வெற்றிகரமாக நீட்டிக்கப்பட்டு அதனை அடுத்து சந்திரயான் விண்கலம் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி புவிவட்டப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுப்பாதைக்குள் செலுத்தப்பட்டது. தற்போது நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்குள் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. மேலும் சந்திராயன்3 விண்களம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23ம் தேதி விண்கலம் நிலவில் மெதுவாக தரையிறக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திராயன்3 விண்கலம் நேற்று இரவு  தனது அடுத்தடுத்த சுற்றுப்பாதையில் நுழைந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் நகர்த்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

நேற்று இரவு நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் அடுத்த கட்டத்திற்கு நுழைந்த சந்திராயன்3 விண்கலம் தனது முதல் வீடியோவை எடுத்து அனுப்பியுள்ளது. அதனை இஸ்ரோ நேற்றிரவு வெளியிட்டுள்ளது. அதில் நிலவின் மேற்பரப்பில் உள்ள மேடுகள், பள்ளங்கள் தெள்ளத்தெளிவாக தெரிவதை உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களும், மக்களும் வியந்து பார்த்து வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Isro released Chandrayaan 3 entering lunar orbit video


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->