3 நாட்கள் வெளுத்து வாங்க போகும் மிக கனமழை.! சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 11ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் உருவாகிறது. இது 10, 11-ந்தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக 10-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் பெரும்பாலான இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். மேலும் 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. 

11, 12, 13-ந்தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், தென் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 

மேலும் இன்று முதல் 12-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பருவமழை தீவிரம் அடையும் என்பதால் மாவட்ட கலெக்டர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். இதில் தேசிய பேரிடர் மேலாண்மை, மாநில பேரிடர் மேலாண்மை குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. 

மேலும் சென்னையில் மீண்டும் மழை பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி செய்துள்ளது. இதில் முகாம்கள், பேரிடர் மீட்பு குழுவினர், 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையும், உதவி மையங்களும் மாநகராட்சி அனைத்து துறை ஊழியர்களும் தயார் நிலையில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chance of 3 days of very heavy rain precautionary measures intensified in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->