மழை காலம் பொறந்தாச்சு! குடை,ரெயின் கோர்ட் ரெடி பண்ணியாச்சா? 10 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!
Chance of heavy rain in 10 districts of Tamil Nadu
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் புதுக்கோட்டை, வேலூர், திருப்பூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்த வாய்ப்புள்ளதாக தகவல்.
நாளை கோவை, திருப்பத்தூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசாத முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஓரிரு இடங்களில் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Chance of heavy rain in 10 districts of Tamil Nadu