மக்களே உஷார்! இன்று 6 மாவட்டங்கள், நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிக்கான காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இன்று ஆரஞ்சு எச்சரிக்கை: கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு.  
கனமழை : சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், புதுச்சேரி.  

நாளை (12ம் தேதி) ஆரஞ்சு எச்சரிக்கை:  
அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை.  
கனமழை  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால்.  

13ம் தேதி  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

16 மற்றும் 17ம் தேதிகள்  செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.  

இன்று மற்றும் நாளை கிழக்கு கடற்கரைச் சாலை அருகே உள்ள பகுதிகளில் 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai IMD Tamilnadu very heavy rain alert


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->