தமிழகம் முழுவதும்.. "அடுத்த 2 நாட்களுக்கு".. எச்சரிக்கும் வானிலை மையம்.!!
Chennai imd warned heavy rain in Tamil Nadu next 2days
லட்சத்தீவு பகுதி மற்றும் அதனை ஒட்டிய அரபிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடக்க சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து நாளை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Chennai imd warned heavy rain in Tamil Nadu next 2days