3 நாட்களுக்கு வெளியே போக வேண்டாம் - எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற 31-ந்தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்துள்ளது. இதற்கு ரீமல் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் வடக்கு திசையில் நகர்ந்து இன்று தீவிர புயலாக வலுவடையக் கூடும் என்றும், நள்ளிரவு வங்காள தேசத்தில் உள்ள கேப்புப் பாராவுக்கும், மேற்கு வங்காளம் சாகர் தீவுக்கும் இடையே கரையை கடக்கக் கூடும் என்றும், புயல் கரையை கடக்கும் போது தரைக்காற்று மணிக்கு 110-120 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 135 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு குறைவு என்றும், வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பத்தை பொறுத்தவரையில், தமிழகத்தில் அனேக இடங்களில் இன்று இயல்பையொட்டியும், நாளை முதல் 29-ந்தேதி வரை மூன்று நாட்களுக்கு வெப்பம் இயல்பைவிட அதிகரித்தும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அதனையொட்டிய தென் மாவட்ட கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் இன்றும், நாளையும் வீசக்கூடும் எனவும், வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 75 கி.மீ. முதல் 130 கி.மீ. வரையிலான வேகத்தில் இன்று வீசக்கூடும் என்றும், இதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிகை விடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heat increase in tamilnadu after three days


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->