#BREAKING:: தமிழகம் முழுவதும் அலர்ட்.. 36 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!
Heavy rain alert in 34 districts across TamilNadu
தென்னிந்திய வான் பகுதியில் மேல் கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும் மற்றும் மேற்கு திசை காற்றும் ஒன்றிணைவதால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று எச்சரித்து இருந்தது.
அந்த வகையில் இன்று காலை முதல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை தொடங்கிய சாரல் மழை நாள் முழுவதும் நீடித்தது. இந்த நிலையில் தமிழகத்தின் 34 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 34 மாவட்டங்களும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Heavy rain alert in 34 districts across TamilNadu