தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!!
Heavy rain in 18 districts in TN for next 3hours
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மேலும் வலுவடைந்து தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய கிழக்கு வங்க கடலில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த புயலானது வரும் மே 11ம் தேதி வடக்கு-வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான முதல் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர்,மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இனிமேல் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
English Summary
Heavy rain in 18 districts in TN for next 3hours