கனமழை எச்சரிக்கை : இதுக்கு மேல நிலைமை என்னானு தெரியாது!...முதலமைச்சர் வழங்கிய அறிவுரைகள் இதோ! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக வலைத்தளங்களில் விஷமிகள் பரப்பும் பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம். அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள் பின்வருமாறு,

*15.10.2024 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

*15.10.2024 முதல் 18.10.2024 வரை தனியார் ஐ.டி. நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.

*தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

*வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மீட்புப் படகுகள் இன்றே நிலைநிறுத்தப்பட வேண்டும்.

*மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுடைய பொறுப்பு மாவட்டங்களுக்குச் சென்று, ஆயத்தப் பணிகளையும், மீட்பு, நிவாரணப் பணிகளையும் மாவட்ட நிருவாகத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

*மெட்ரோ இரயில் மற்றும் பறக்கும் இரயில்களின் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

*அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

*தங்குதடையின்றி ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

*பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.

*ரொட்டி, குடிநீர் பாட்டில்களை நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்க வேண்டும்.மேலும், மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்குச் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

*சாலைப்பணிகள் நடைபெறும் இடங்களில் இரவு நேரத்தில் போதுமான ஒளிரும் பட்டைகள் மற்றும் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.

*மழை அளவு, அணைகளின் நீர்வரத்து ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்து அணைகளில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும்.

*பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்குச் சிறப்பு முன்னுரிமை அளித்துப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

*தடையற்ற குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யப் போதுமான ஜெனரேட்டர்களை வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain warning i do not know the situation over this here are the instructions given by the chief minister


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->