அடுத்த 3 மணி நேரம் மிக முக்கியம்.. தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


அடுத்த 3 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டின் தமிழ்நாட்டின் வளிமண்டல மேல் பகுதியில் கீழ் அடுக்குகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மில்லுடன் கூடிய மிதமானது முதல் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் காரைக்கால் ஆகிய தென் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

அதேபோன்ற அடுத்த மூன்று மணி நேரத்திற்கு திருப்பத்தூர், மதுரை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain will occur in south districts next 3hrs


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->