வானிலை மையம் எச்சரிக்கை... வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும். இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதன் ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிக்கிறது.

இதன் காரணமாக நாளை தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த நான்கு நாட்களுக்கு மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IMD announced low pressure zone likely to form in Indian Ocean


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->